தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அதிமுகவினரும், திமுகவினருக்கு ஒருவரை ஒருவர் குறைக் கூறிக் கொண்டு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் மோதல் போக்கு நீட்டித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 3வது கட்சியான மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மலர போவது மக்கள் நீதி மையத்தின் ஆட்சி கிடையாது மக்களின் ஆட்சி என்றும், எங்கள் மொழியும் பண்பாடும் விற்பனைக்கு கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் பொருளாதாரத்தை 4 மடங்காக உயர்த்த போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.