தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பது தவறானது. ஊரடங்கு வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பது உண்மைதான். ஆனால் மக்களின் உயிரை ஊரடங்கு தான் காக்கும் என்பதை முதலமைச்சர் அறிந்திருப்பார் என்று நம்புகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.