தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை மாற்றி அமைத்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
விஜய்யின் அடுத்த புதிய நகர்வு ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு எளிதில் ரத்தம் கிடைக்கச்செய்யும் வகையில் ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியில் உங்களுக்கு தேவையான ரத்த வகை, ரத்தத்தின் அளவு உள்ளிட்டவற்றை பதிவு செய்தால் போதும். “மக்களின் உயிரை காப்பாற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விஜய் ரசிகர் மன்ற, தெரிவித்துள்ளது.