Categories
தேசிய செய்திகள்

மக்களின் கடன் சுமை அதிகரிப்பு… ரிசர்வ் வங்கி அறிக்கை..!!

கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக மக்களின் கடன் சுமை அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். பொருளாதார ரீதியாக அனைவரும் கஷ்டத்தை சந்தித்தனர். இதனால் அவர்களின் கடன் சுமை அதிகரித்து இருந்தது. கொரோனாவால் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது 2020 21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தமிழ்நாட்டு மக்களின் கடன் சுமை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 37.1 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வீடுகளில் சேமிக்கும் அளவு ஜிடிபியில் 10.4 சதவீதம் அளவுக்கு சரிந்து உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |