Categories
தேசிய செய்திகள்

“மக்களின் கனவு நனவாகி விட்டது”… பிரதமரை பாராட்டிய மக்களவை உறுப்பினர் லல்லு சிங்…!!

ராமர் கோவில் கட்டுவதன் மூலம் இந்துக்களின் உடைய நீண்ட நாள் கனவை பிரதமர் நிறைவேற்றி உள்ளார் என்று அயோத்தியின் மக்களவை உறுப்பினர் லல்லு சிங் தெரிவித்துள்ளார். 

1990 ஆம் வருடம் ராமஜென்ம பூமி இயக்கம் பிரபலம் அடைவதற்கு முந்தைய காலங்களிலேயே மக்களவை உறுப்பினர் லல்லு சிங் இந்த இயக்கத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அவர் கூறியதாவது, ” விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மறைந்த முன்னாள் தலைவர் அசோக் சிங்கல், பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி மற்றும் துறவிகள் பலர் ராமஜென்ம பூமி இயக்கத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர்.

இறுதியாக இந்துக்களின் கனவை பிரதமர் மோடி நினைவாக்கியுள்ளார். அவர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று நம்பிக்கை இருந்தது. இதற்காக பலர் பாடுபட்டுள்ளனர், பலர் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். கோயில் விரைவில் கட்டப்படும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்க சென்ற 2014 ஆம் வருடம் முதல் அயோத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பணிகளை விரைவில் முடிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அனைவரும் எண்ணத்திலும் ராமர் உள்ள நிலையில் அரசியல் பிரச்சினைகள் குறித்து பேச விரும்பவில்லை. பெரும்பான்மையான மக்கள் கோவில் கட்ட வேண்டுமென விரும்புகின்றனர். கோயில் கட்டுவதன் மூலம் அரசியல் திசைமாறும் இது மக்களை ஒன்றிணைத்து கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். கோயில் கட்டப்பட்ட பிறகு நாட்டில் அதிகமான மக்களை ஈர்க்கும் பெரிய தளமாக அயோத்தி விளங்கும் என அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

Categories

Tech |