பனோரமா திரைப்பட விருதுகளுக்கு ‘அசுரன்’ படத்தை தேர்வு செய்ததற்கு நடிகர் தனுஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும், கணேஷ் விநாயகத்தின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ .
Asuran, at the indian panorama section of IFFI 2020. An honour for all of us involved in making the film. Thanks for selecting a film of the people.
— Dhanush (@dhanushkraja) December 20, 2020
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, அபிராமி ,கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ‘அசுரன்’ தேர்வானது படக்குழுவிற்கு கிடைத்த பெருமை . மக்களின் படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார் .