பிரபல நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின் முக்கியமான 4 நகரங்களை ரஷியா கைப்பற்றி தங்களது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இந்த பகுதிகள் ஒட்டுமொத்த உக்ரைனின் 15 சதவீதமாகும். இந்நிலையில் சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன்-ரஷியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. மேலும் ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டு வருகிறது. இந்த பின்னடைவு ரஷியாவின் தோல்விக்கான அறிகுறி என மேற்கத்திய நாடுகள் கூட்டமைப்பு கூறியுள்ளனர். கடந்த 2014- ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து ராணுவ நடவடிக்கை மூலம் கிரிமியா தீபகற்பத்தை ரஷியா கைப்பற்றியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரஷியாவையும்-கிரிமியாவையும் இணைக்கும் பாலத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து உக்ரைன் மீதான போருக்கு தலைமை தாங்க ஜெனரல் ஜெர்சி சுரொவ்கின் என்ற ராணுவ தளபதியை ரஷியா புதிதாக நியமித்துள்ளது.மேலும் நாட்டின் பல நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விவரம் இதுவரை தெரியவில்லை.