கடலின் மீது கட்டப்பட்ட மிக பிரம்மாண்டமான பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குரேஷியா நாட்டில் உள்ள கோமர்னா என்ற பகுதியில் ஒரு கடல் அமைந்துள்ளது. இந்த கடலின் மேற்பரப்பில் மிக பிரம்மாண்டமாக ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கட்டுவதற்கு சீனா உதவி செய்துள்ளது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா காரணமாக பணிகள் முடங்கியது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பாலம் கட்டுவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப் பட்டு, தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் திறப்பு விழாவின் போது பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பாலமானது தெற்கு கடலோர பகுதிகளை பிற நாட்டுடன் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பிறகு திறக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்ட பாலம் அந்நாட்டு வரலாற்றில் முக்கியமான தருணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.