Categories
மாநில செய்திகள்

மக்களின் நீண்ட நாள் கனவு…. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்….? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்….!!!!!

பிரபல அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை  அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள கோயம்பேட்டில் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும். இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்  400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு பணி தொடங்கியது. தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை அமைச்சர் சேகர் பாபு இன்று  ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது,”இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது. மேலும் முழுமையாக பணிகள் முடிந்த பிறகு திறக்கப்படும் தேதி  அறிவிக்கப்படும். வருங்காலங்களில் இது போன்று இன்னும் 2  பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்

Categories

Tech |