புயல் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது.
தமிழகத்தில் நிவர் புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்படும் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முகாம்களில் மக்கள் கூட்டம் இருக்கும் நிலை ஏற்படும்போது, கொரோனா பாதிப்பு அதிகம் பரவ வாய்ப்புள்ளது. அங்கு சமூக இடைவெளி கடைபிடிப்பது மிகவும் கடினம்.
மேலும் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மக்கள் அனைவரும் புயலில் இருந்து தப்பித்து கொரோனாவிடம் மாட்டிக்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர்.