தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்கான சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழக மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சாலை கட்டமைப்பை மேம்படுத்தவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலை போக்குவரத்தில் மக்களுடைய பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை மாநிலத்தின் ஒரு பகுதியில் அனைத்து பகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சாலை கட்டமைப்பை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நெடுஞ்சாலைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிய சாலைகள் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், உறுதித்தன்மையை மேம்படுத்துதல், புதுப்பித்தல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.