182 தொகுதிகளை உடைய குஜராத் மாநில சட்ட சபைக்கு டிச..1, 5 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில் பா.ஜ.க மூத்ததலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சியில்லை. தேர்தலில் வெற்றியடைவோர் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளகளின் பெயர் இடம் பெறாது என நினைக்கிறேன். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ்தான் முக்கிய எதிர்க் கட்சி ஆகும். இருப்பினும் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கடந்துவரும் நெருக்கடியை பார்க்க முடியும்” என்று பேட்டி அளித்தார்.