பிரித்தானிய மகாராணியாரை முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இக்கட்டான சூழ்நிலை ஒன்றிலிருந்து காப்பாற்றியதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் முன்பு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த கூடாது என்பது ராஜ மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் 1997-ஆம் ஆண்டு மக்களின் இளவரசியாக வாழ்ந்து வந்த இளவரசி டயானா விபத்து ஒன்றில் கொலை செய்யப்பட்டபோது பிரித்தானிய மகாராணியார் எந்தவித உணர்ச்சியும் வெளிகாட்டவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வேளையில் பிரித்தானிய பிரதமராக இருந்த டோனி பிளேர் மகாராணியாரிடம் இப்படி மௌனமாக இருப்பது மக்களுக்கு பிடிக்காது என்று கூறி அவருடைய மௌனத்தை கலைத்துள்ளார்.
மேலும் பிரதமர் கூறியதன்படி பிரித்தானிய மகாராணியார் மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் லண்டன் திரும்பி இளவரசி டயானாவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய Dominic Sandbrook மக்களின் மனநிலையை அறியாமல் இருந்த மகாராணியாரை அந்த சூழ்நிலையில் இருந்து காப்பாற்றியது பிரதமர் டோனி பிளேர் தான் என்று கூறியுள்ளார்.