Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களுக்காக அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் – மாஸ் காட்டும் தமிழக அரசு ..!!

தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்திருக்கிறார். கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள், கொரோனா சிகிச்சை மையங்களிலும், திடமான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள், தீவிர அறிகுறி உள்ள நோயாளிகளாக  மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவர்களின் இரத்தத்தில் இருக்கக்கூடிய ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இரத்தத்தில் இருக்கக்கூடிய ஆக்சிஜன் அளவு குறையும் போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிர் இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இதனை தவிர்க்கும் பொருட்டு நோயாளிகள் இரத்தத்தில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜன் அளவை கணக்கிட பல்ஸ் ஆக்ஸிமீட்டரைஅதிக அளவு பயன்படுத்துமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டிருக்கிறார்.

தற்போது தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 23 ஆயிரம் கருவிகள்  வந்துள்ளன என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதம் இருக்கக்கூடிய கருவிகளும் ஓரிரு நாட்களில் தரப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அந்த அறிக்கை மூலமாக தெரிவித்திருக்கிறார். கொரோனா வேகமாக பரவி வரும் இந்த காலத்தில் முதல்வரின் உத்தரவு அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.

Categories

Tech |