Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மக்களுக்காக நடைபெற்ற நேர்காணல் முகாம்…. நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிகாரிகள்….!!!!

மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் தாலுகாவில் பிரதாபராமபுரம், புளியஞ்சேரி, விக்கிரபாண்டியன் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராம மக்களின் நலனுக்காக வருவாய் துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில்  வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், தாசில்தார் தனசேகரன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், ஊராட்சி தலைவர் ஜெயராமன், ராதா கிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் அர்ஜுனன், வட்ட வழங்கல் அலுவலர் சிவதாஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன், மேலாண்மை அலுவலர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் அதிகாரிகள் 11 பேருக்கு வீட்டு மனை பட்டா, 2 பேருக்கும் முதியோர் உதவித்தொகை, 18 பேருக்கு  விவசாய பொருட்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |