Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…. விமான கட்டணமும் உயர்ந்துருச்சி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான விமான கட்டணம் ரூ.8,200-ல் இருந்து ரூ.11,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை போல சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல ரூ.7,400 ஆக இருந்த விமான கட்டணம் ரூ.8,500 ஆகவும், ஹைதராபாத் செல்வதற்கான விமான கட்டணம் ரூ.5600-ல் இருந்து 6 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கொல்கத்தா செல்வதற்கு ரூ.6,500 ஆக இருந்த விமான கட்டணம் 12 ஆயிரம் ரூபாயாகவும், ஸ்ரீநகர் செல்ல 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |