நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மத்திய அரசு டீசல் விலையை 21 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என்று சங்கம் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் கெடு விதித்துள்ளது. மேலும் மூன்று வாரத்திற்குள் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளது. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் என்று அஞ்சப்படுகிறது.
Categories