எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்றத்தால் டீ மற்றும் காபியின் விலை உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடைகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை 2,145 ரூபாயாகவும், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 967 ஆகவும் உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் டீ, காபி மற்றும் பேக்கரி சங்க உரிமையாளர் விழா நடைபெற்றது.
இந்த விழாவின் போது சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் எரிவாயு சிலிண்டர் பால் மற்றும் எண்ணெயின் விலை உயர்வால் பேக்கரி கடை கள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக வருகிற 28-ம் தேதி சில பண்டங்களின் விலை அதிகரிக்க படுவதாக கூறினார். அதாவது டீ ரூபாய் 12, காபி ரூபாய் 20, வடை, போண்டா மற்றும் பஜ்ஜி 20 ரூபாய், வெஜிடபிள் பப்ஸ் 15 ரூபாய், காளான் மற்றும் முட்டை டாப் 20 ரூபாயாக விலையேற்றம் செய்யப்படுகிறது. மேலும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.