Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அடுத்த ஷாக்… வந்துருச்சு புதிய ஆபத்து… விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் 27 முறை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை.

நாடு முழுவதும் மக்கள் மனதில் கொரோனா குறித்து அச்சம் இன்னும் நிலவிக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சிலருக்கு புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களைத் தனிமைப்படுத்தி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மாதிரிகளை ஐஐஎஸ்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், மூன்று பேரின் மாதிரிகளில் உள்ள ஜீன்களில் வைரஸின் 27 உருமாற்றங்கள் காணப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஒரு மாதிரியில் 11 க்கும் அதிகமான முறை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி எதிர்கால திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும், தடுப்பூசி பயன்பாட்டை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |