தமிழகத்தில் மக்களுக்கு எப்போதும் கொடுக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
இதற்கு மத்தியில் அதிமுக கடந்த சில மாதங்களாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இந்நிலையில் மகளிர் உதவி குழுக்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்,மக்களுக்கு எப்போதும் கொடுக்கும் ஆட்சியை அதிமுக ஆட்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி தொடர்களின் ஆட்சி என்று சூளுரைத்த அவர், அரசின் வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய விவரங்கள் கொடுக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.