முதல்வர் ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் போக்குவரத்து சீர் செய்வதற்காக 20 அடிக்கு ஒரு காவலர் நிற்பது வழக்கம். அத்துடன், முதலமைச்சர் செல்லும் நேரத்தில் அவர் விரைவாக சென்று சேரும் வகையில், போக்குவரத்து சற்று நேரம் நிறுத்தப்படும்.
தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவலர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.