Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

பாமக இளைஞரணித் தலைவர்  அன்புமணி ராமதாஸ், பூஸ்டர் டோஸ்  தடுப்பூசியை  இலவசமாக வழங்கப்பட வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் டோஸ்  தடுப்பூசி செலுத்திக்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

இதையடுத்து  பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும் எனவும் இதற்கு தனியார் மருத்துவமனை மையங்கள் கொரோனா தடுப்பூசி மருந்தின் விலையோடு கூடுதலாக 150ரூபாய் வரை சேவைக் கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளின் விலையானது ரூ.225ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த விலை அதிகமாக இருப்பதாகவும் மற்றும்  சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் பூஸ்டர் டோஸ்களையும் மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அந்த வகையில், பாமக இளைஞரணித் தலைவர்  அன்புமணி ராமதாஸ், பூஸ்டர் டோஸ்  தடுப்பூசியை  இலவசமாக வழங்கப்பட வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “18 – 60 வயதுப் பிரிவினருக்கு கொரோனா 3-வது (பூஸ்டர்) டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முந்தினம்  தொடங்கியுள்ளன.

Categories

Tech |