பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்கள் என நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர், நாட்டில் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறையினர் ஒருவரும் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தினால் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் மக்கள் ஆங்காங்கே ஒன்று கூடி மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, நாகாலாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா நாகாலந்து முதல்வரிடம் கேட்டறிந்தார். இந்தநிலையில் நாகாலந்து துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாகாலந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானது இதயத்தின் நெருடுகிறது. இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை. பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பாக இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.