Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு குட் நியூஸ்!…. அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது கொரோனா பாதிப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் நேற்று புதிதாக 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,24,476-ஆக உள்ளது. அதேபோல் 16,473 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்துள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 33,09,032-ஆகவும், 22 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37, 837-ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்று சென்னையில் 742 பேரும், கோவையில் 726 பேரும், செங்கல்பட்டில் 334 பேரும், திருப்பூரில் 245 பேரும், சேலத்தில் 212 பேரும், ஈரோட்டில் 203 பேரும், குமரியில் 97 பேரும், திருச்சியில் 119 பேரும், திருவள்ளூரில் 149 பேரும், காஞ்சிபுரத்தில் 93 பேரும், மயிலாடுதுறையில் 11 பேரும், பெரம்பலூரில் 9 பேரும், தென்காசியில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |