Categories
உலக செய்திகள்

மக்களுக்கு கொரோனா குறித்து முக்கிய தகவல்.. லண்டன் மேயர் அறிவிப்பு..!!

லண்டனில், தென்னாபிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக மேயர் தெரிவித்துள்ளார். 

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தற்போது பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இதனால் பல விளைவுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில், தற்போது தென்ஆப்பிரிக்காவில், கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா பரவி வருகிறது.

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவால் ஒரு நபர் பாதிப்படைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து லண்டன் மேயர் சாதிக் கான் கூறியுள்ளதாவது,  சர்ஜ் பரிசோதனை விரிவு படுத்தப்படுகிறது. இது Southwark ல் இருக்கும் SE-16ன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

எனவே அவர் லண்டன் மக்களிடம், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் படி கேட்டுக் கொண்டால் அதை எடுங்கள். ஏனென்றால் இதனால் தான் கொரோனா அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதை கண்டறிய முடியும். இதற்காக Deal Porter சதுக்கத்தில் மொபைல் கொரோனா பரிசோதனை தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. லண்டன் மக்கள் அங்கே  பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |