Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இன்று முதல் அபராதம் ரத்து…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது . தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான முடிவை டெல்லி பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை நடந்த கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் அனைவருக்கும் 2000 ரூபாய் அபராதத் தொகை 500 ரூபாயாக குறைக்கப்பட்ட நிலையில், அதனை நீக்குவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த பிப்ரவரி மாதம் காரில் ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்துள்ளதால் முகக்கவசம் தொடர்பான அபராதம் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |