சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை,அண்ணா சதுக்கம் அறிவியல் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த சேவைக்காக 20 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை வசதிகளுடன் கூடிய 389 ஆம்புலன்ஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம்.தமிழகம் முழுவதும் உள்ள தொலைதூர கிராமங்களில் நடமாடும் மருத்துவமனைகள் மூலம் மாதம் 40 மருத்துவ முகாம்கள் நடைபெறும். இதன் சிறப்பம்சங்கள்: ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஊழியர் மற்றும் நவீன மருத்துவ வசதிகள்.
Categories