இன்று தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, தூத்துக்குடிக்கு செய்யும் நலத்திட்டங்கள் பற்றி கனிமொழிக்கு தெரியாது. நாட்டு மக்களை பற்றி பார்த்தால் தெரியும். என்னென்ன திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றோம் என பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும். மக்களுக்கு நன்றாக தெரியும். கனிமொழிக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை, மக்களுக்கு தெரிஞ்சா போதும்.
ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. ஏற்கனவே அரசிடம் பல கோரிக்கைகள் வந்தன. பெற்றோர்களும் பல கல்லூரிகளிலும், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஊடகத்திலும், பத்திரிகைகளிலும் பள்ளியை திறப்பதனால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன என தெரிவித்தன.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலாம் என்ற அச்சத்தை தெரிவித்தார்கள். அதனால் தமிழகம் முழுவதும் பெற்றோர், ஆசிரியர் என அனைவரிடமும் கருத்து கேட்க பள்ளிகளில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெறப்பட்ட அந்த கருத்துக்களெல்லாம் கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு குறித்து அரசு முடிவெடுக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.