Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை…. விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

மக்களுக்கு நன்மை செய்வதற்கே எனக்கு நேரம் போதவில்லை. இதனால் வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரம் கிடையாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூரில் 581 கோடி மதிப்பிலான 99 புதிய பணிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் ” 47 கோடியில் கரூர் திருமா நிலையூர் பகுதியில் விரைவில் பொது பேருந்து நிலையம் அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஆராய்ச்சி அரங்கம், ஜவுளி பொருட்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படும். தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை நினைத்து நான் மனம் நிறைவு அடைகிறேன். மக்கள் பணிகளுக்கு இலக்கு வைத்து முடித்துக் காட்டுபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. எப்போதும் எதையும் பிரம்மாண்டமாக நடத்துபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி.

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகளை குறுகிய காலத்தில் வழங்கியவர் ,இதை செய்து காட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனது பாராட்டுக்கள். ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் மக்களுக்கு பணியாற்றி வருகிறோம். கருணாநிதி தான் என்னுள் இருந்து என்னை இயக்கி வருகிறார். உங்களுடைய ஆட்சியில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என மக்கள் கூறுகின்றனர். மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் தான் வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை. என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலம் பிரபலமாக நினைப்பவர்களை பார்த்து வருத்தப்படுகிறேன். நானும் இருக்கிறேன் என்பதை காட்டி பேட்டி தருவோருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |