இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு எதிரொலியால் கடந்த மார்ச் 30 ஆம் தேதிக்கு பிறகு ஒருநாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதனை அடுத்து அனைத்து மாநிலங்களும் முழு ஊரடங்கு அமலில் வைத்திருந்தால் கட்டாயம் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று டெல்லி தலைநகரம் சுட்டிக்காட்டியுள்ளது. இது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாகவும் அமைந்துள்ளது.