நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மிக மிக சிறு வயதில் திமுகவிற்காக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டேன் அப்படி அரசியலில் நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது பதவிகள் அல்ல, பாராட்டுக்கள் அல்ல, சிறைச்சாலைகள், சித்தரவதைகள்தான் எனக்கு முதலில் கிடைத்தது.
மக்களுக்கு நல்லது செய்வதால் என்னை மக்கள் வரவேற்கின்றனர், பாராட்டுகின்றனர், மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது. தமிழகத்தில் பல திட்டங்கள் ஓராண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.