மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “மக்கள் நீதி மையத்தின் மக்கள் கொள்கைகளில் ஒன்று, வலுவான உள்ளாட்சிகளை முழுமையான மாநில சுயாட்சி ஆக மாற்றுவது ஆகும். மக்கள் நீதி மையமானது இதை கருத்தில் கொண்டே கருத்தியல் ரீதியிலும், களத்திலும் உள்ளாட்சிகளின் நலனை சீர்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. மேலும் நாங்கள் மக்களின் தேவைகளை அடிப்படையிலிருந்து நிறைவேற்ற விரும்புகிறோம்.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே கமிஷன் ஏஜெண்டுகள். மக்களுக்கு நல்லது செய்யாமல் கமிஷன் வாங்கிக்கொண்டு மட்டுமே செயல்படுகிறார்கள். வரும் வழியில் இடுகாடு ஒன்றை பார்த்தேன். அங்கு மனித உடலோடு குப்பையை கொட்டி வைத்துள்ளனர். இடுகாட்டை கூட விட்டு வைக்காத ஆக்கிரமிப்பாளர்கள் தான் இப்போது ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.