ஒமைக்ரான் பரவல் பேரிடராக பரவிய நிலையில் மார்ச் மாதத்துக்குள் ஐரோப்பிய நாடுகளில் 60 சதவீதம் பேரை பாதிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் அது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பாதிப்புகளால் உலகின் பல நாடுகள் சிரமப்பட்டு வரும் நிலையில் வெள்ளிரேகை போல நம்பிக்கையை உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
இதனிடையில் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குனர் ஹான்ஸ் குலுகே செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, மார்ச் மாதம் இறுதிக்குப் பிறகு கொரோனா பரவல் விலகத் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்துக்கு பிறகு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு பிறகு உலகின் மற்ற பகுதிகளுக்கும் கொரோனா விலகத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.