தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இந்த கண்காணிப்பு அலுவலர்கள் அனைவரும் மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவதை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.