வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதி சபதம் எடுத்துள்ளார்
உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனோவின் கடுமையான பாதிப்புகளிலும் கூட புதிய வருடத்தை மக்கள் நம்பிக்கையுடன் எதிர் கொண்டுள்ளார்கள். இதற்காக உலக தலைவர்கள், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து புயல் பாதிப்பு, வேலையின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்து கொண்டிருக்கும் வடகொரிய மக்களை ஊக்குவிக்கும் வகையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அதாவது வட கொரிய மக்களுக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, இந்தக் கடுமையான சூழ்நிலையிலும் ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றி! இப்புதிய ஆண்டிலும் எங்கள் மக்களின் குறிக்கோள்களும் விருப்பங்களும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். மேலும் புதிய சகாப்தத்தை கொண்டுவருவதற்கான முயற்சியில் நான் கடுமையாக உழைப்பேன் என்று சபதம் கூறியுள்ளார்.