லண்டனில் இந்த வருடத்தில் நேற்று இரண்டாம் முறையாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டன் கொரோனாவால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. மேலும் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்பின் உச்சத்தை அடைந்தது. எனவே பிரிட்டனில் இப்போது வரை ஒட்டுமொத்தமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 43,30,000 ஆகும்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,27,000 ஆகவுள்ளது. மேலும் நாள் ஒன்றிற்கு பலி எண்ணிக்கை சராசரியாக 240 ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 14ஆம் தேதியன்று கொரோனாவால் ஒருவர் கூட பலியாகவில்லை.
எனினும் உருமாற்றம் அடைந்த கொரோனாவால் தலைநகர் லண்டனில் பாதிப்பு தீவிரமடைந்தது. ஆனால் அஸ்ட்ராஜெனகா மற்றும் பைசர் ஆகிய தடுப்பூசிகளினால் லண்டனில் பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று லண்டன் நகரத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இதேபோன்று மார்ச் 28ஆம் தேதியான நேற்றும் கொரோனா உயிர் பலி ஏற்படவில்லை.