இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் ராணுவ வீரர்கள் காவலர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.