Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. களமிறங்கிய ஈஷா ….. முக்கிய அறிவிப்பு ….!!

ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் இம்மாதம் தொண்டாமுத்தூர் மற்றும் தேவராயபுரம் ஆகிய கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் முத்திபாளையம் நண்பர்கள் பொது நற்பணி மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து தொண்டாமுத்தூரில் உள்ள விஸ்வேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் பிப்ரவரி 21-ம் தேதி இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது

அதேபோல், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆல் இஸ் வெல் ரத்த தான இயக்கத்துடன் இணைந்து தேவராயபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் பிப்ரவரி 28-ம் தேதி இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில் சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்று பயன்பெறலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 90801 78524, 95242 90388 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதற்கு முந்தைய வாரங்களில் பூலுவப்பட்டி, கரடிமடை ஆகிய கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |