கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பற்றி நடத்திய ஆய்வில் மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.தற்போது நாடு முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ்ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக்கொண்டால் 90% பலன் கிடைக்கும் என்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 2வது டோஸ் செலுத்துவதற்கு 1 மாத இடைவெளி இருந்தால் 70% பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டரை அல்லது மூன்று மாத இடைவெளி இருப்பது கூடுதல் பலன் தருவதாக கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.