கொரோனா பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். பொழுதுபோக்கிற்காக அதிகமானோர் செல்போனை பயன்படுத்தி வரும் இந்த காலத்தில், அதிகமான வந்ததிகளும் பரவுவது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. ஏராளமான வதந்திகள் மிக விரைவாக வாட்ஸ் அப் மூலமாக பலரை சென்றடைகின்றன.
இதனால் மக்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றன. அந்த வகையில் 10 நாட்களுக்கு தஞ்சாவூரில் மின்வெட்டு என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அந்த தகவலில் உண்மையில்லை, அது வெறும் வதந்தி, மக்கள் யாருமே நம்ப வேண்டாம். வரும் ஜூலை 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே பராமரிப்பு காரணமாக மின்வெட்டு இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.