சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி விலையை இரு மடங்கு உயர்த்தி சீரம் நிறுவனம் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மத்திய அரசில் பரிந்துரைப்படி தடுப்பூசியின் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும், மாநில அரசுக்கு 400 ரூபாய்க்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட தடுப்பூசியை தற்போது இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி உருமாறிய கொரோனாவை அளிக்கும் தன்மை இந்த தடுப்பூசியை உள்ளதாக சீரம் விளக்கம் அளித்துள்ளது.
இதனையடுத்து மத்திய அரசுக்கு வழங்குவதை போலவே மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசியை ரூ.150 க்கு தர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி விலையை தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. மனித நேயமற்ற செயல். விலை உயர்வு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். மாநிலம் நிதி நெருக்கடியில் இருக்கும் போது தடுப்பூசி விலை ஏற்றத்தின் சுமையை எப்படி தாங்க முடியும் என கேட்டுள்ளார்.