Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களுக்கு ரூ.4,500 தந்தது அதிமுக அரசுதான்… முதல்வர் ஈபிஎஸ் பெருமிதம்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களுக்கு 100 ரூபாய் கூட தந்ததில்லை, ஆனால் அதிமுக 4,500 கொடுத்துள்ளது என முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சியை தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி அதிமுக கடந்த சில மாதங்களாகவே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தபோது, மக்கள் துன்பத்தில் இருக்கும்போது நேசக் கரம் நீட்டுவது அதிமுக அரசுதான் என தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்களுக்கு 100 ரூபாய் கூட தந்ததில்லை. ஆனால் அதிமுக 4,500 கொடுத்துள்ளது. மக்கள் மீது அக்கறை காட்டும் அரசாக அதிமுக தான் இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |