Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு வந்தது எச்சரிக்கை… அய்யய்யோ… அலர்ட்… உஷார்…!!!

மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை செய்தும், போலிகளிடம் பொதுமக்கள் ஏமாந்து வருகிறார்கள். உங்கள் மொபைலில் மெசேஜ் மூலமாகவோ அல்லது சமூக வலைத்தள பக்கத்தில் உங்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு விழுந்துள்ளது என்று கூறி வரும் லிங்கை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் மதுரை ஆசிரியை கதிதான் உங்களுக்கும்.. அதனால் மிக எச்சரிக்கையாக இருங்கள்.

Categories

Tech |