பிரிட்டானியா நிறுவனம் தன்னுடைய குட் டே, மில்க் பிகீஸ், மேரி கோல்டு பிஸ்கட்களின் விலையை 7% வரை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரால் சப்ளை செயினில் ஏற்பட்ட பாதிப்பு, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாதாரண மக்கள் தான் இந்த பிஸ்கட்களின் நுகர்வோர் என்பதால் விலை உயர்வு அவர்களை கடுமையாக பாதிக்கும். மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் பிஸ்கட் விற்பனை 19% சதவீதம் குறைந்துள்ளது மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.