தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 16000சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
6 இடங்களில் இருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், வெளியூரில் இருந்து சென்னை நோக்கி வர 17000 பேருந்துகள் இயக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது வெளியூரில் வேலை செய்து கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.