பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தோல்வியை சந்தித்தார். மேலும் அவர் பிரதமர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து ஷெபாஸ் ஷெரீப் என்பவர் பாகிஸ்தானின் புதிதாக பிரதமராக பதவியேற்று கொண்டார்.
இந்த நிலையில் ஷெபாஸ் ஷெரீப் மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையை உயர்த்த போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் அவர், மானியம் அளிப்பது நிறுத்தப்பட்டால் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை தாறுமாறாக உயரும் என்பதால் மின்சாரம் மற்றும் எரிபொருள் மானியங்களை திரும்பப் பெறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.