Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…! ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்…. எப்போது தெரியுமா…??

வருகின்ற 2-ம் தேதி முதல் ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் மீண்டும் இயங்க உள்ளது.

ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக தினம்தோறும் ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் இயங்கி வந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடு தகர்க்கப்பட்ட நிலையில் ஈரோடு – ஜோலார்பேட்டை முன்பதிவில்லாத பயணிகள் ரயில் மீண்டும் இயக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் வண்டி எண் 064 12 கொண்ட ஈரோடு – ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் வருகின்ற 2-ம் தேதி முதல் மீண்டும் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில் ஈரோட்டில் தினந்தோறும் காலை 6. 25 மணிக்கு புறப்பட்டு காலை 7.42 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்து அடையும். அதன்பின் 7.45 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும்.

அதேபோன்று மறுமார்க்கத்தில் வண்டி எண் 064 11 கொண்ட ஜோலார்பேட்டை – ஈரோடு பயணிகள் ரயில் தினம்தோறும் ஜோலார்பேட்டையில் பிற்பகல் 3 10 மணிக்கு புறப்பட்டு மாலை 5.57 மணிக்கு சேலத்தை வந்தடையும். அதன்பின் 6 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு ஈரோட்டிற்கு செல்லும். இந்த செய்தியை சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |