வருகின்ற சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் மக்களுடன் தான் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பேசிய கமல்ஹாசன், “வரப்போகும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி மக்களுடன் தான் கூட்டணி வைத்துக் கொள்ளும். கூட்டணி என்பது என் வேலை மற்றும் வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் கமல்ஹாசன் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.