Categories
உலக செய்திகள்

“மக்களுடைய வரிப்பணம் வீணாக கூடாது”… மன்னர் சார்லஸின் அதிரடி திட்டம்…!!!!!

மக்களுடைய வரிப்பணம் வீணாக கூடாது என்பதற்காக ராஜ குடும்பத்தினர் மீது கட்டுப்பாடுகளை கொண்டு வர மன்னர் சார்லஸ் திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. மகாராணியர் உயிருடன் இருக்கும்போதே கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உழைக்கும் ராஜ குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதாவது மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் அல்லது சீனியர் ராயல் டீம் ஒன்றை குறித்த திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளாராம். அதில் எட்டு ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே இடம். அவர்கள் யார் யார் என்றால் மகாராணியர் இளவரசர் சார்லஸ், கமீலா, இளவரசி ஆன், இளவரசர் வில்லியம், இளவரசி கேத்தரின், இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சோபி போன்றோர் ஆவர்.

இந்த நிலையில் மகாராணியர் மறைந்து விட்டால் அவர் தவிர்த்து இனி மற்ற ஏழு பேர் மட்டுமே ராஜ குடும்ப பணிகளை மேற்கொள்ளும் ராஜ குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சென்டிமென்ட் பார்க்கும் மகாராணியார் இப்படி ராஜ குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்க மிகவும் யோசித்திருக்கிறார். ஆனால் சார்லஸ் மன்னரானதும் அதை நிறைவேற்ற முடிவு செய்துவிட்டார் அது ஆகவே இனி மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் என்னும் பட்டியலில் இளவரசர் ஹரி அவரது மனைவியாகிய மேகன் இளவரசர் ஆண்ட்ரூ போன்றோர் இடம் பெற மாட்டார்கள்.

ஏற்கனவே ஆண்ட்ரூவின் மகளான யூஜினி இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்வதற்காக மக்கள் வரிப்பணத்தில் 100,000 பவுண்டுகளை செலவிட்ட விஷயம் பற்றி அறிந்த சார்லஸ் இனி இளவரசி யூஜினிக்கோ அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி விட்டாராம். அதனால் இளவரசர் ஹரி அவரது மனைவியாகிய மேகன் இளவரசர் ஆண்ட்ரூ மட்டுமல்லாமல் ஆண்ட்ரூவின் பிள்ளைகளான இளவரசி யூஜினி மற்றும் அவரது சகோதரி பீட்ரைஸ் போன்றோரும் இனி உழைக்கும் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் என்ற பட்டியலில் வர வாய்ப்பு இல்லாமல் போகலாம். மேலும் மக்களுடைய வரிப்பணம் இப்படி எல்லாம் செலவிடப்படக் கூடாது என என்னும் மன்னர் சார்லஸ் இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்கக்கூடும் என தான் கருதுவதாக ராஜா குடும்ப எழுத்தாளரான Angela Levin கூறுகிறார்.

Categories

Tech |