Categories
பல்சுவை

மக்களே…. ஃபிக்ஸட் டெபாசிட் செய்ய போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி…. வாங்க தெரிஞ்சிக்கலாம்….!!!!

நாம் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் என்று நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால், கையிருப்பில் உள்ள நம் பணத்தை வேகமாக பெருக்குவதற்கு அதுவே சிறந்த வழி. அதன் மூலமாக குறைந்த காலத்திற்குள் சேமிப்பு பணம் இரட்டிப்பாக மாறும். இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகள் கருதப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தொடங்கி பல்வேறு வங்கிகள் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டங்களுக்கு அதிக வட்டிகளை வழங்கி வருகிறது. அதனால் டெபாசிட் செய்வதற்கு முன்னதாக எந்தந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்வது நமக்கு லாபத்தை தரும்.

அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சாதாரண குடிமக்களுக்கு 12 மாதம் முதல் 120 மாதங்கள் வரை டெபாசிட்களுக்கு 5.90 முதல் 6.70 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கியில் 6.15 முதல் 6.95 சதவீதம் வரையில் பட்டி லாபம் பெற முடியும். இதையடுத்து எச்டிஎஃப்சி வங்கி சாதாரண குடிமக்களுக்கு 5.75% முதல் 6.25% வரையும், மூத்த குடிமக்களுக்கு 6% முதல் 6.50% வரையும் வட்டி வழங்குகிறது. பஜாஜ் பைனான்ஸ் வங்கி சாதாரண குடிமக்களுக்கு 5.65% முதல் 6.50% வரையும், மூத்த குடிமக்களுக்கு 5.90% முதல் 6.75% வரையும் வட்டி வழங்குகிறது.

எஸ்பிஐ வங்கி சாதாரண குடிமக்களுக்கு 2.90% முதல் 5.40% வரையும், மூத்த குடிமக்களுக்கு 3.40% முதல் 6.20% வரையும் வட்டி வழங்குகிறது. எச்டிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் சாதாரண குடிமக்களுக்கு 2.75% முதல் 6% வரையும், மூத்த குடிமக்களுக்கு 2.75% முதல் 6.50% வரையும் வட்டி வழங்கி வருகிறது. இறுதியாக ஆக்சிஸ் பேங்க் சாதாரண குடிமக்களுக்கு 2.50% முதல் 5.75% வரையும், மூத்த குடிமக்களுக்கு 2.50% முதல் 6.25% வரையும் வட்டி வழங்குகிறது. அதனால் மக்கள் இதனை அறிந்து கொண்டு ஃபிக்ஸட் டெபாசிட் செய்யுங்கள்.

Categories

Tech |